தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை! - Karur collectrate

கரூர்: அரசு புறம்போக்கு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்திய தனி நபரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடத்துடன் பொதுமக்கள் முற்றுகை!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடத்துடன் பொதுமக்கள் முற்றுகை!

By

Published : Oct 22, 2020, 3:18 PM IST

கரூர் அருகே உள்ள வீரராக்கியம், பால்ராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கணேஷ் நகரில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடியிருப்புகளின் குடிநீர் வசதிக்காக அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எட்டு செண்ட் ஒதுக்கப்பட்டடு, நேற்று (அக்.21) பணிகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இன்று (அக். 22) அந்தப் பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் வந்து ஆட்சியர் வாகனத்தின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, பொதுமக்களை பிரச்னைக்குரிய இடத்தை பார்வையிட அழைத்து சென்றனர்.

இதனால் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details