கரூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வியாபாரம் செய்துவருவதாக தொடர்ந்து நகராட்சி அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. புகாரையடுத்து அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றிவருகின்றனர்.
அந்தவகையில் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் சாலையில் நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்த இடத்திற்கும் மேல் தவறான முறையில் கடைகள் கட்டி வியாபாரம் செய்துவருவதாக மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுசம்பந்தமாக பலமுறை அலுவலர்கள் அந்த கடைக்காரர்களை எச்சரித்துள்ளனர்.