தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளநீர் வியாபாரியை வெட்டிய இருவர் - காவல் துறையினர் விசாரணை - Karur Murder issue

கரூர் : இளநீர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை பைக்கில் வந்த இருவர் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karur Murder issue
Karur Murder issue

By

Published : Sep 18, 2020, 4:01 PM IST

கரூர் சின்ன ஆண்டான்கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கரூர் கோவை சாலையில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (செப்.18) குணசேகரனும் அவரது மனைவியும் இளநீரை மொத்தமாக வாங்குவதற்கு அதிகாலையில் பொள்ளாச்சி சென்றுவிட்டனர். இதனால், இளநீர் கடையை குணசேகரன் மகன் கிருஷ்ணமூர்த்தியும் (27) அவரது மனைவி ஷஸ்மிதாவும் (23) பார்த்துக்கொண்டனர்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் இளநீர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை மனைவி ஷஸ்மிதா கண் எதிரே தலை, கைகளில் வெட்டிவிட்டு வந்த வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கில் வந்து வெட்டி சென்ற நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details