தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்! - Karur District News

கரூர்: வர்த்தக நிறுவனங்கள், விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கரூர்
கரூர்

By

Published : Apr 20, 2021, 10:07 AM IST

Updated : Apr 20, 2021, 10:13 AM IST

கரூர் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பது குறித்து கரூர் நகராட்சி ஆணையர் சுதா உத்தரவின்பேரில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

கரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
ஏப்ரல் 19ஆம் தேதி மாலை கரூர்-கோவை சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.
இதில் பிரபல பிரியாணி கடையான கொக்கரக்கோ பிரியாணி கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையை பூட்டுப்போட்டு ஒட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழனிமுருகன் துணிக்கடையில் அதிக வாடிக்கையாளர்களை அனுமதித்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தினால் ரூ.5,000 அபராதம் விதித்து நகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தேநீர்க் கடைகள், இனிப்பகம், திரையரங்குகள் போன்றவற்றில் ஆய்வுமேற்கொண்ட நகராட்சி அலுவலர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை தகுந்த இடைவெளியில் அனுமதிக்க அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்தனர்.
Last Updated : Apr 20, 2021, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details