கரூர் நகராட்சி பகுதியில் நாள்தோறும் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பை 50 டன் அளவிற்கு நகராட்சியால் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் மூலம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அளிக்க ஆலை அமைக்க கரூர் நகராட்சி திட்டமிடப்பட்டு நகரின் தினசரி உருவாகும் மக்காத கழிவுகள் அனைத்தும் தினசரி அளிக்கும் வகையில் புதிய திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கரூர் நகராட்சி குப்பையில்லா நகரமாக உருவாகும், மேலும் எரியூட்டு ஆலை அமைக்க நகராட்சி சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த எரியூட்டு ஆலை தமிழ்நாட்டில் ஈரோட்டில் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது, மேலும் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒரு டன் குப்பையில் காற்று மாசுபாடின்றி எரித்து பேவர் பிளாக் எனப்படும் செங்கல் தயாரிக்கக்கூடிய சாம்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.