தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக, கரூர் நகராட்சியில் செயல்படும் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில் நகராட்சிக் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியார் துறைகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி வரும் 11ஆம் தேதி முதல் பணியாற்றும் இடத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அச்சமின்றி பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் - கரூர் நகராட்சி ஆணையர் - karus latest news
கரூர் : விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
municipality_commissioner
முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு கரோனா குறித்த அச்சம் குறைந்துவிட்டது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் காலணிகளை அணிவதைப்போல முகக்கவசங்களை அணிந்து வெளியே வர வேண்டும்' என ஆணையர் சுதா கேட்டுக்கொண்டார்.