கரூர்: இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அமலாக்க துறையால் சட்டவிரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்ட அரசியலைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணிக்கும் செந்தில் பாலாஜிக்கு இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஆகவே, கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணியும் இணைந்து கலந்து கொண்டது இல்லை. மேலும், அரசு நிகழ்ச்சிகளை பெரும்பாலும் ஜோதிமணி புறக்கணிக்கப்படும் வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதன் பின் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. எனவே மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன் இடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் “பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் ஏன் கைதுசெய்ய வேண்டும்?. தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய அவசிய தான் என்ன?.