தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் 'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர்.. எம்.பி ஜோதிமணியின் ஸ்மார்ட் பதில்! - செந்தில்பாலாஜி

கரூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என செந்தில் பாலாஜி காய் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுகவை ஓரங்கட்டி நேரடியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தேவையான அரசியல் நகர்வுகளில் பாஜகவினர் ஈடுபட துவங்கியுள்ளனர்.

ஜோதிமணி
ஜோதிமணி

By

Published : Nov 7, 2022, 11:23 AM IST

தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருபவர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அரசியல் ஆளுமைகளில் ஜோதிமணியும் ஒருவர். எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலை மையமாக வைத்து சமூக வலைதளத்தில் ஜோதிமணி குறித்து அவதூறு செய்திகளை சிலர் பதிவிட துவங்கியுள்ளனர்.

இதன் துவக்கமாக ’கண்டா வரச் சொல்லுங்க’ ஜோதிமணி எம்பி தொகுதியில் காணவில்லை என்ற டிவிட்டர் பதிவு தற்போது கரூர் மக்களவை தொகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் குளித்தலை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டப்பேரவை தொகுதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி என 6 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை, அடிக்கடி சந்தித்து பெறுவதுடன், கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்ப்பதிலும் வேகம் காட்டி வருகிறார்.

கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளை திமுக வசம் வைத்துள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் மக்களவைத் தொகுதி பறித்துவிடதாத படி ஜோதிமணியிடம் இருந்த அரசியல் நெருக்கத்தை குறைத்துக்கொண்டார். இதனால் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஜோதிமணி புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியராக உள்ள பிரபுசங்கரிடம் தர்ணா போராட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாமை நடத்தி முடித்து இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரூர் வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஜோதிமணி பங்கேற்று முதல்வரின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் அதன் பின்பும் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்திலும், ஜோதிமணி தேசிய அரசியலிலும் களப்பணி ஆற்றி வருகின்றனர். தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பேருந்து நிழற்கூடம், சாலை வசதி, பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், இளைஞர் முன்னேற்றம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் செயல்படுத்தி வருகிறார். மற்றொருபுறம் தேசிய அரசியலில் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ(Bharat Jado) யாத்திரை பயணத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இன்னும் ஒரு சில மாதங்களே மக்களவைத் தேர்தலுக்கு உள்ள நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவரின் ட்விட்டர் பதிவில் கரூர் எம்பியை காணவில்லை என்ற தலைப்பில், கரூர் எம்பி ஜோதிமணியை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வது போன்ற புகைப்படத்துடன் இணைக்கப்பட்டு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில், ஜோதிமணிக்கு பிடித்த இடம், போலீஸ் வேன், பாராளுமன்ற கேண்டின், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது என அவரது செயல்பாடுகளை குறிப்பிட்டுள்ளனர். சண்டக்கோழி கரூர் அமைச்சர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற கேண்டினில் சலுகை விலையை பஜ்ஜி போண்டா சாப்பிட்டதை தவிர இவரால் கரூர் தொகுதிக்கு எந்த பயனும் இல்லை. கண்டா வரச் சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்கள் என்ற தனுஷ் நடித்த கர்ணன் பட பாடல்வரிகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து கரூர் திரும்பியுள்ள ஜோதிமணி எம்பியிடம் இன்று கேட்டபோது,’’பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவை, வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற அவதூறு பரப்புவதை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ளது.

தொகுதியில் உள்ள மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எனது களப்பணி நன்கு தெரியும். அவதூறுகளுக்கும், வீண் பழிகளுக்கும் நேரத்தை செலவிட விரும்பவில்லை. இளம் வயதில் பதவி, பணம் ஆசையை துறந்துவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று வரை விலகாமல் மக்கள் பணி செய்து வருகிறேன்” என கூறி முடித்துக் கொண்டார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என செந்தில் பாலாஜி காய் நகர்த்தி வரும் சூழ்நிலையில், அதிமுகவை ஓரங்கட்டி நேரடியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தேவையான அரசியல் நகர்வுகளில் பாஜகவினர் ஈடுபட துவங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக செந்தில் பாலாஜியை நேரடியாக எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு முறை தயாரான போதும் காவல்துறை அனுமதி மறுப்பு செய்ததால், திமுக புகலூர் நகராட்சி அலுவலகம் அருகே இருந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் புகைப்படங்களை பாஜகவினர் சாணி பூசி அழித்தனர். அடுத்ததாக கரூர் எம்பி ஜோதிமணியை குறிவைத்து பாஜக தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அனைத்தையும் கரூர் மக்களவைத் தொகுதி மக்கள் உற்று கவனித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details