தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - ஜோதிமணி எம்.பி தர்ணா

கரூர்: க. பரமத்தியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோதிமணி எம்.பி தர்ணா
ஜோதிமணி எம்.பி தர்ணா

By

Published : Jan 3, 2020, 3:30 PM IST

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதியில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் தொடங்கி இன்றும் நடைபெற்றுவருகிறது. கரூர் மாவட்டத்தில் க. பரமத்தியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பரமத்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, ’ஒன்றிய பெருந்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஒன்பது நபருடைய ஒப்பந்தம் வேண்டும். தற்போது அதிமுகவிலிருந்து ஏழு ஒன்றிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற 2 ஒன்றிய தலைவர்களின் வெற்றியையும் சேர்த்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிமணி எம்.பி தர்ணா

அதிகாலையிலிருந்து எட்டு மணி நேரமாக போராடுகிறோம். வேட்பாளர்களும் எங்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். சரியான தீர்வு கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்’ என்றார்.

இதையும் படிங்க:வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு - மக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details