தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பாஜக என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளது' - ஜோதிமணி எம்.பி., - mp jothimani press meet

கரூர்: தமிழ்நாட்டில் பாஜக என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளது என கரூர் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

karur mp jothimani
கரூர் எம்பி ஜோதிமணி

By

Published : Jan 23, 2021, 9:57 AM IST

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியாதாவது, கரூரில் வருகின்ற 25ஆம் தேதியன்று ராகுல் காந்தி, தமிழ்நாடு மீட்க, விவசாயம் காக்க, "வாங்க ஒரு கை பாப்போம்" என்ற தலைப்பில் மக்களை சந்திக்க கரூர் வருகை தர உள்ளார். கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம், கரூர் பேருந்து நிலையம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வாங்கல், பள்ளபட்டி பகுதியில் விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.

தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கட்டாயம் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் தொகுதி என்பதால் கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேர்வைத் தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும், அது எந்த தொகுதி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.

ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு மாதிரியான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

ராகுல் காந்தியின் மீது தமிழ்நாடு மக்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக என்னும் ஆபத்து வராமல் இருப்பதற்காக மேலும் தமிழர் கலாசாரத்திற்கு பங்கம் ஏற்படாமல் இருக்க ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிலிருந்து பாஜக, அதிமுக கூட்டணி விடுவிக்கப்படும், தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 4ஆவது நாளாக சோதனை

ABOUT THE AUTHOR

...view details