கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், சென்னையைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இன்று (ஏப். 7) திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், கறுப்பு சட்டை போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, 'தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பதற்கு எதிராக முதலமைச்சருக்கு மனு அளிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும், http://chng.it/BbQWNdrV7C என்ற இணைப்பைச் சொடுக்கி மனுவில், தங்களது பெயர்களைச் சேர்த்துக்கொள்ளுமாறும், மற்றவர்களுக்கு இணைப்பை பகிருமாறும்’ அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்