கரூர் மாவட்டத்தில் வசித்துவரும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பு செய்துவரும் மக்கள் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில், காவிரி, அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி கரூர் மக்களின் உள்ளூர் கட்டுமான பணிக்கு சப்ளை செய்துவருகின்றனர். இதனைத் தடுக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
மணல் திருடுவதை விட்டுவிட்டு சேவை செய்ய வாருங்கள்! ஜோதிமணி அழைப்பு - collector
கரூர் : மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "தேர்தல் பரப்புரையின்போது மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளுவது குறித்து மக்கள் கூறினர். ஆளும் கட்சியினர், உயர் பதவியில் இருக்கும் அமைச்சர் சட்டவிரோதமாக இதனை செய்துவருகின்றனர். குறிப்பாக அமராவதி காவிரி ஆற்றில் மணலை எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.
அதற்கு காவல் துறையும் பாதுகாப்பு அளித்துவருகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரை நீதிமன்றக் கிளையை அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அமைச்சர்கள் மணல் திருடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.