தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரூர் எம்பியும், அரவக்குறிச்சி எம்எல்ஏவும் ஓசியில் விளம்பரம் தேடுபவர்கள்' - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்! - கார்விழி அணைக்கட்டு

கரூர்: எம்பி ஜோதிமணியும் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் ஓசியில் விளம்பரம் தேடுபவர்கள் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

-minister-m-r-vijayabaskar
-minister-m-r-vijayabaskar

By

Published : Sep 13, 2020, 4:40 PM IST

கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கரூர் மாவட்டம் கார்விழி அணைக்கட்டிலிருந்து ஆத்தூர் வழியாக வாங்கல் வரை வரும் தண்ணீரினால் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவந்தது.

ஆனால் இந்த அணைக்கட்டில் சாயக்கழிவுகள் கலக்கப்பட்டதால் வழக்கு தொடரப்பட்டது. அதற்கடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 18 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாமலிருந்தது. அந்த வழக்கை ஜெகநாதன் என்பவர் தொடர்ந்திருந்தார். எனவே அவரிடம் பேசி தண்ணீரைத் திறக்க பேச்சுவார்த்தை நடத்திவந்தோம்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இதற்கிடையில் கரூர் எம்பி ஜோதிமணியும் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் தண்ணீரை திறக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் செய்வோம் என அரசியல் செய்துவருகின்றனர். இருவரும் ஓசியில் விளம்பரம் தேடுவதற்காக இப்படி செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details