உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 உத்தரவு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் பலர் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் மற்றொரு சிலர் சட்டத்திற்குப் புறம்பாக சீட்டை வைத்து சூதாடி வருகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும் தற்போது 144 தடை உத்தரவையும் மீறி விளையாடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
கரூரில் சூதாட்டம் - ஏழு பேர் கைது - Karur Money Keep gambling
கரூர்: சின்ன தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் 1040 ரூபாயை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
![கரூரில் சூதாட்டம் - ஏழு பேர் கைது பணம் வைத்து சூதாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6933876-thumbnail-3x2-krr.jpg)
பணம் வைத்து சூதாட்டம்
பணம் வைத்து சூதாட்டம்
இதன் காரணமாக கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விரைந்து சென்று சம்பவ இடத்தில் சூதாடி ஏழு பேர் மற்றும் அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் 1040 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனோ பாதிப்பு: சேலத்தில் 2 பேர் வீடு திரும்பினர்