தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: கரூரில் குதிரைப் பந்தயம் - Karur DMK

கரூர்: ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குதிரை பந்தயப் போட்டியில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

MK stalin birthday celebration at karur
horse racing program

By

Published : Mar 4, 2020, 11:49 PM IST

கரூர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குதிரைப் பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் கேடயம் சான்றிதழை வழங்கினார்.

இந்தப் போட்டியை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையேற்று வழிநடத்தினார். இந்த குதிரை பந்தயப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசு ஏழாயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட்டன.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குதிரைப் பந்தயப் போட்டி

சிறிய குதிரைப் பந்தயப் போட்டியில் முதல் பரிசு சேலம் சந்திரன், இரண்டாம் பரிசு கொல்லாபுரம் நர்சுரிதன், மூன்றாம் பரிசு ஸ்ரீமதி ருத்ரா குரூப்ஸ், நான்காம் பரிசு சென்னை நரேஷ் ஆகியோர் பெற்றனர்.

அதேபோல், பெரிய குதிரைப் பந்தயப் போட்டியில் முதல் பரிசு வெற்றி விநாயகர், இரண்டாம் பரிசு சமயபுரம் மாரியம்மன் துணை, மூன்றாம் பரிசு கேரளா பிரியா குரூப்ஸ், நான்காம் பரிசு சென்னை நரேஷ் ஆகியோர் பெற்றனர்.

இதையும் படிங்க:ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details