தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்! - கரூர் அம்மா பூங்கா

கரூர்: ஆண்டான்கோயில் பகுதியில் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பூங்கா, உடற்பயிற்சி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைப்பு
பூங்கா, உடற்பயிற்சி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைப்பு

By

Published : May 31, 2020, 5:38 PM IST

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட, பல்வேறு இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சிப் பகுதியில், பெரியார் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதேபோன்று அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.

உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

மேலும் நாடக மேடை, பயணியர் நிழற்குடை போன்றவற்றிற்கு, கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதையும் படிங்க:சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details