கரூர்: புத்தாண்டு தினத்தன்று புதிதாக ஏதாவது ஒரு கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் குறிக்கோள்களை நிர்ணயம் செய்வது உண்டு.
அதனடிப்படையில் கரூரில் 100 அடி உயரமுள்ள அலைப்பேசி கோபுரத்தின் மீது ஏறிய நபரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
100 அடி உயர செல்போன் கோபுரம்
அந்த நபர் கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் உள்ள பழைய இரும்பு கொள்முதல் செய்யும் கடையில் பணியாற்றும் இளங்கோ (44) ஆவார்.
இவருக்கு தாம் பணியாற்றும் இடத்தில் கட்டடத்தின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கரூர் நகர்ப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நீண்ட நாள் ஆசை.
அதனைப் புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றிக்கொள்ள நேற்று (ஜன.10) மாலை 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.