மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 26) அனைத்துக் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எங்களது கொள்கைகளை அறிவியல் ஆக்கப்பூர்வமாக செய்வோம் -கரூர் மநீம வேட்பாளர் - KARUR MAKKAL NEETHI MAIYAM CANDIDATE
கரூர்: சுகாதாரம், நீர் மேலாண்மை, பெண்களுக்குப் பாதுகாப்பு போன்ற எங்களது கொள்கைகள் அனைத்தையும் இயற்கைச் சீரழிவு இல்லாமல் அறிவியல் ஆக்கப்பூர்வ மூலமாக செய்வது எங்களின் கடமை என கரூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ஹரிஹரன், தேர்தல் அலுவலர் அன்பழகன் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,'கமலின் கொள்கைகள் காரணமாக சமூகத் தொண்டாற்ற கொண்டிருந்த நான் அவருடன் இணைந்து இருக்கிறேன். சுகாதாரம், நீர் மேலாண்மை, பெண்களுக்குப் பாதுகாப்பு போன்ற கொள்கைகள் அனைத்தும் இயற்கைச் சீரழிவு இல்லாமல் அறிவியல் ஆக்கப்பூர்வ மூலமாக செய்வது எங்களுடைய கடமை' எனத் தெரிவித்தார்.