தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: லாரி ஓட்டுநர் உயிரிழப்பு! - Karur District News

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டல் கடலை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

By

Published : Mar 6, 2021, 1:12 PM IST

கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து, மதுரைக்கு சுண்டல் கடலை ஏற்றிச்சென்ற லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ரபிக் (55) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரியானது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த தடாகோயில் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் ரபிக், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஓட்டுநர் கொடூர கொலை: மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details