தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெண்ணெய்மலை கோயிலில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் - தொடங்கி வைத்த அமைச்சர் - Who helped the public Minister M.R. Vijayabaskar karur

கரூர்: வெண்ணெய்மலை முருகன் கோயிலில் தார்ச்சாலை, பூங்கா அமைக்கும் பணியைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Laying the groundwork for various projects
Laying the groundwork for various projects

By

Published : Jun 18, 2020, 6:16 PM IST

கரூரில் புகழ்பெற்ற வெண்ணெய்மலை முருகன் கோயிலைச் சுற்றி தார்ச்சாலை, வடிகால், மின் விளக்கு, பூங்கா உள்ளிட்ட பணிகளுக்காக 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ், 14 ஊராட்சிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கரோனா சிறப்பு நிதி, 42 லட்சம் ரூபாய் வழங்கினார்.

அப்போது ஊராட்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா, கரூர் ஒன்றியத் தலைவர் பாலமுருகன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


For All Latest Updates

TAGGED:

tnkrr

ABOUT THE AUTHOR

...view details