உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தாவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும்,கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தற்போது கரோனா வைரஸ் தொற்று பல இடங்களில் பரவி சமூகத் தொற்றை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கரூரில் இன்று (ஆக.19)ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் 294 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.