கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது குளித்தலை வட்டம் மருதூர் கிராம விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு! - Agriculture affected lack water Karur
கரூர்: தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டுத் தொகையை திருப்பித் தரவேண்டுமென விவசாயிகள் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
அந்த மனுவில், "சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி செய்திருந்தோம். நீர்வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே காப்பீட்டு தொகையை திருப்பித் தரவேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டை நாங்களின்றி நடத்தக் கூடாது - பட்டியலின மக்கள் மனு!
TAGGED:
Karur Insurance claim refund