கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் இடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைக்கவசம், சீட் பெல்ட் மற்றும் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, எமன் மற்றும் சித்திர புத்தர் வேடமணிந்து இருவர் பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
எமன் வேடம் அணிந்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து புலியூர், பசுபதிபாளையம், கரூர், தாந்தோணிமலை, சுங்ககேட் போன்ற பகுதிகளில் இருக்கும் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் இதுபோன்ற முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆய்வாளரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:'கரோனா போலீஸ பாத்திருப்பீங்க... கரோனா ஆட்டோவ பாத்திருக்கீங்களா'