கொரோனா வைரஸ் தொற்று கரூர் மாவட்டத்தில் பரவாமல் இருக்க மாவாட்ட நகராட்சி சார்பில் பல்லேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான சினிமா திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி முடிந்த பின்பும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
திரையரங்க நுழைவுப் பகுதி, காத்திருப்பு அறை, இருக்கைகள், கைப்பிடிகள், நடைபாதைகள், திரையரங்கிற்குள் பொதுமக்கள் கை வைக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
ஒரு கிருமி நாசினியுடன் 19 லிட்டர் தண்ணீர் கலந்து அக்கலவையை நாள் ஒன்றுக்கு நான்கு முறை அடிக்கப்படுகிறது. இவை முறையாக செய்யப்படுகிறதா என்பது குறித்து கரூர் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீப்ரியா தலைமையிலான அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேருந்து நிலையம், பேருந்துகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வதுடன் கிருமி நாசினியை தொடர்ந்து அடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கொரோனா பீதி: நோயாளிகள், பார்வையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!