தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

கரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

hospital temporary staff protest karur hospital temporary staff protest hospital temporary staff protest ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொழிலாளர்கள் போராட்டம் கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
hospital temporary staff protest

By

Published : Mar 21, 2020, 11:58 AM IST

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 200க்கும் மேற்பட்டவர்கள் பத்மாவதி மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் மூலமாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் துப்புரவு, பாதுகாப்பு, எலக்ட்ரிக்கல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் கடந்த மார்ச் மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதச் ஊதியத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என்றும், அதை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கூறி இன்று காலை 7 மணி பணிக்கு வந்த ஒப்பந்தப் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மேலாளர், காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஊதியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது.

பணி புறக்கணிப்பு போராட்டத்திள் ஈடுபட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்கள்

இதை ஏற்க மறுத்த ஒப்பந்த தொழிலாளர்கள், பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறினர். ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வங்கியை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details