கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி, வரையப்பட்ட விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ரங்கோலி கோலங்களை கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனத்தில் கையொப்பமிட்டு வாகன பரப்புரையைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, உறுதிமொழியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழி வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய மலர்விழி, “கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், சுமார் 4,131 முதியவர்கள் உள்பட மொத்தம் 6,937 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.