கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றுவருபவர் மாணவி சபீதா (15). இவர் அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நடைபெற்ற 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில் கலந்துகொண்டு, 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பின் கீழ் தனது படைப்பை சமர்பித்தார்.
இதற்காக அவர், கேரளா மாநிலத்திலுள்ள இஸ்ரோ விண்வெளி மையத்திற்குச் செல்வதற்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் ஏழாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் இவரை, இன்று க. பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வழியனுப்பினார்கள்.