கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கரோனா சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக மருத்துவர் பணி - நேர்க்காணல் விவரங்கள் அறிவிப்பு - doctors selection interview at karur medical college
கரூர் : கரோனா பணிக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக மருத்துவர்களாக பணிபுரிய, ஜூன் 1ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் தெரிவித்துள்ளார்.
karur govt medical college doctors selection interview
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களை தேர்வு செய்யும். இதற்கான நேர்காணல் ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.