தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் ! - கல்லூரி நிர்வாகம்

கரூர்: அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர்

By

Published : Mar 26, 2019, 5:10 PM IST

கரூர் மாவட்டம் தான்தோன்றி அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இந்தக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

இதில் பொருளியல் துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு மாணவ மாணவிகள் உள்ளனர். இந்தத் துறையின் தலைவராக இருப்பவர் முனைவர் இளங்கோவன் (52).

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை இளங்கோவன் கொடுத்துள்ளார். இதனால் மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று காலை அரசு கலை கல்லூரி முன்பு திரண்டனர். இதனையடுத்து மாணவ மாணவிகள் கரூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details