தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video Leak: அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம் பெற்ற ஊழியர்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் உடற்கூராய்வு மேற்கொள்ள லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மருத்துவமனை ஊழியர் லஞ்சம் பெறும் வீடியோ
மருத்துவமனை ஊழியர் லஞ்சம் பெறும் வீடியோ

By

Published : Mar 20, 2022, 8:41 PM IST

கரூர்:கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் உடற்கூராய்விற்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மருத்துவமனை பிணவறை பிரிவில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், லஞ்சம் பெற்ற ஊழியர் வேளாங்கண்ணி என்பவரை பணியிடைநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவமனை ஊழியர் லஞ்சம் பெறும் வீடியோ

மேலும் இதுதொடர்பாக விசாரணைக்குழு நாளை திங்கட்கிழமை (மார்ச் 21) விசாரணை மேற்கொள்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இனி யாரேனும் பொது மக்களை கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் பள்ளி விடுதியில் முறைகேடு; 2பேரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details