தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் சாலை விபத்தில் 50 வயது முதியவர் மரணம் - கரூர்

கரூர்: கோட்டைமேடு பாலம் அருகே வேகமாக வந்த கார் மோதியதில் இலை வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 வயது முதியவர் மரணம்

By

Published : Apr 30, 2019, 10:29 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி 50. வாழை இலை வியாபாரியான இவர் இன்று வழக்கம்போல் புதுப்பாளையத்தில் இருந்து வாழையிலை தட்டை எடுத்துக்கொண்டு குளித்தலை சென்றிருந்தார். இந்நிலையில் குளித்தலை சுங்கச்சாவடி பகுதியில் அதனை விற்பனை செய்து விட்டு மீண்டும் மணப்பாறை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் முதியவர் மரணம்

அப்போது, கோட்டைமேடு பாலம் அருகே வந்த நான்கு சக்கர வாகனம், சைக்கிளில் சென்ற சன்னாசி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சன்னாசி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இதுதொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலை வியாபாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details