கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 6 நிலையான பறக்கும் படைக் குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்
இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதி பறக்கும் படை அலுவலர் அமுதா தலைமையில் மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புகலூர் காகிதபுரம் காலனியை சேர்ந்த உமாசங்கர் என்பவர் ஓட்டி வந்த காரினை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.59,500 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.