கரூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி சார்பற்ற 10 விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் மனு அளித்தனர்.
கள் இறக்கும் பானைகளை உடைத்த காவலர்கள் - நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்
கரூர்: விவசாய தோட்டத்தில் தென்னை மரத்தில் கட்டியிருந்த பானைகளை மதுவிலக்கு காவல் துறையினர் உடைத்ததற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம், "தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டிலிருந்து தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து கள் இறக்குவதற்கு விவசாயிகள் போராடிவருகின்றனர். தொடர்ந்து விவசாயிகள் கள் இறக்குவதும், அது தொடர்பாக வழக்கு சந்திப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால், நேற்று கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில், விவசாய தோட்டத்தில் தென்னை மரத்தில் கட்டியிருந்த பானைகளை மதுவிலக்கு காவல் துறையினர் உடைத்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலர்களுக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்” என்றார்.