தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூச்சுக்காற்று வழங்க முழு சம்பளத்தையும் வழங்கிய மின்வாரிய ஊழியர்! - corona update

கரூர் மின்வாரிய ஓட்டுநர் தனது ஒருமாத ஊதியமான 30,000 ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

மின்வாரிய ஊழியர்
மின்வாரிய ஊழியர்

By

Published : May 28, 2021, 7:28 PM IST

கரூர்: மின்வாரிய ஊழியர் ஒருவர், தனது முழு சம்பளத் தொகையையும் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், கடந்த மே 11ஆம் தேதி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பெருநிறுவனங்கள், தனிநபர்கள் தாமாக முன்வந்து, நிதி உதவி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், மக்களிடம் பெறப்படும் நன்கொடைகள் முழுமையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், நன்கொடை மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படுமெனவும் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இதனால் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கரூரைச் சேர்ந்த, கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் கேசவன், தனது ஒரு மாத சம்பளத்தொகையான 30,000 ரூபாயை மின்வாரிய மேற்பார்வையாளர் செந்தில்ராஜனிடன் வழங்கி, அதன் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தந்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் உயிரைக் காப்பதற்கு சமூக அக்கறையோடு தனது மாத சம்பளத்தை, கரோனா நிவாரண நிதிக்கு முழுவதுமாக வழங்கிய மின்வாரிய ஊழியரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி தகவல்: பேசினால் பரவும் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details