தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மின்னணு தணிக்கை இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி தொடக்கவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தணிக்கை இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் .
மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் பணத்திற்காகவும், பொருளுக்காகவும் தங்களுடைய வாக்குரிமையை யாரும் விற்க்கூடாது, நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், கரூர் நகராட்சி ஆணையாளர் சுதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட நபர் வெட்டிக் கொலை:குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!