கரூர் மாவட்டம் தொண்டமாங்கினம் ஊராட்சிக்குட்பட்ட கடன்வாங்கியூரில் சிலர் 15 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி அம்மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய தேமுதிக பிரமுகர், ”கடன்வாங்கியூரில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த ஊரில் உள்ள சிலர் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், முள்வேலி அமைத்தும் அந்தப் பகுதியில் பொதுமக்களை செல்லவிடாமல் தடுக்கிறார்கள். அவ்வழியாக மக்கள் சென்றால் அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு: ஆட்சியரிடம் தேமுதிக மனு!
கரூர்: தொண்டமாங்கினம் ஊராட்சிக்குட்பட்ட கடன்வாங்கியூரில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிராம மக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேமுதிகவினர் கிராம மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், குடிநீர் எடுக்கச் செல்வதற்கும், இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. முள்வேலி அமைத்திருப்பதால் மருத்துவமனைக்குச் செல்லவும் அப்பகுதி மக்களால் இயலவில்லை. இது தொடர்பாக முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் எந்த பதிலும் இதுவரை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவிட்டால் அனைவரையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: சிலம்பத்தில் உலக சாதனை செய்த கரூர் இளைஞர்