கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் காரணமாக இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து மக்கள் அதிகம் புழங்கும் சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டது..
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த கரூர் மாவட்ட எஸ்.பி! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கரூர்: பொதுமக்கள் வீட்டிலிருந்து காவல் துறையினருக்கு ஆதரவாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உடலுக்கு வலு சேர்க்கும் வகையில் மிளகு, சீரகம், வெற்றிலை கலந்த கலவை, முட்டை மற்றும் கடலை மிட்டாய் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக காவல் துறையினருக்கு ஆதரவாக மக்கள் செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.