தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கரோனா பரவல் எண்ணிக்கை ஜீரோ ஆகும் வரை சிறப்புக் குழு செயல்படும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி - கரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு வீடுவீடாக ஆய்வு செய்ய கரோனா சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : May 22, 2021, 3:12 PM IST

கரூர்: கரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க 156 கூடுதல் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மையத்தினை அமைக்கும் பணி டிஎன்பிஎல் ஆலையின் சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நேற்று (மே.21) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, கரூர் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டு வரும் 156 படுக்கைகள் வசதியுடன் கூடிய ஆக்ஸிஜன் வழங்கும் சிறப்பு சிகிச்சை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க 156 கூடுதல் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மையத்தினை அமைக்கும் பணி டிஎன்பிஎல் ஆலையின் சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை நேரடியாக சிகிச்சை மையத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு நாள்களில் பணிகள் நிறைவடைந்து வரும் மே 25ஆம் தேதி முதல் 156 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையம், மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதியுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு வீடுவீடாக ஆய்வு செய்து முழுமையாக கட்டுப்படுத்தி, கரூரை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இங்குள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளும் 119 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இதற்கு 119 மண்டல அலுவலர்கள், நான்கு கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார்.

அவர்கள் அந்தந்தப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்துதல், கண்காணிப்பு, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஜீரோ எண்ணிக்கையை எட்டும் வரை இந்தக் குழு செயல்படும். மேலும் மாவட்டம் முழுவதும் நாளை (மே.23) கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details