தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video: 'பார்வ கற்பூர தீபமா..' - 'வாவ்' கரூர் கலெக்டருக்குள்ள இப்படி ஒரு திறமையா..! - நின்னு ச்சூஸ்த்து உண்டே கண்ணுள்ளு ரெண்டு திப்பேஸ்தாவே.. பாடி அசத்தும் கரூர் கலெக்டர்

புஷ்பா திரைப்படத்தின், 'நீ சுபே பங்காரா மாயனே ஸ்ரீவள்ளி..' எனத் தொடங்கும் பாடலை, கிட்டார் சகிதமாக இசைத்தபடி தத்ரூபமாக பாடும் கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரின் காணொலி ட்விட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கரூர் கலெக்டர்
கரூர் கலெக்டர்

By

Published : Apr 8, 2022, 9:38 PM IST

கரூர்:அண்மையில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தின் 'பார்வை நான் பாக்குறேன்’ எனத் தமிழும்; தெலுங்கில் 'நீ சுபே பங்காரா மாயனே ஸ்ரீவள்ளி..' எனத் தொடங்கும் பாடலை, அப்படியே கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தத்ரூபமாகப் பாடியுள்ளார்.

அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தற்போதும் பட்டிதொட்டியெல்லாம்.. தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்டவற்றில் ஒலித்துக் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை மிகவும் கவர்ந்த குரலாகவும்; தங்களின் லவ் என்டர்டெயின்மென்ட் சாங்கில் முதல் இடத்தையும் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பாடகர் ஸ்ரீசித் ஸ்ரீராம் குரல் வளத்தில் தெலுங்கில் நீ சுபே பங்காரா மாயனே ஸ்ரீவள்ளி.. என்றும் தமிழில் பார்வை கற்பூர தீபமா? பேச்சே கல்யாணி ராகமா?.. என்ற பாடல் எனத் தொடங்கும் இப்பாடலை கரூர் மாவட்ட ஆட்சியர் மெய்சிலிர்க்க வைக்கும் அவரது குரலில் பாடி அசத்தியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், கிட்டார் இசைத்தபடி இப்பாடலை தெலுங்கில் 1.39 நிமிடங்கள் பாடி,தனது ட்விட்டரில் காணொலியாக வெளியிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவின் கடைசியில் அவர், 'நிறைய நாட்கள் கழித்து, நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைத்து, பாடியுள்ளேன். தெலுங்கு புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீ சித் ஸ்ரீராமின் மற்றொரு மைல்கல் பாடல் இதுவாகும். தனக்கு தெலுங்கு தெரியாது. இதனால் தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் தெலுங்கு பாடகர்களிடம் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் இசை ஆர்வத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details