தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா நிதியை கரூர் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை' - செந்தில் பாலாஜி

கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய்யை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை என எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

mla-senthil-balaji
mla-senthil-balaji

By

Published : Apr 17, 2020, 8:50 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"அரவக்குறிச்சி தொகுதியில், கரோனா நிவாரண நிதிக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் ஒதுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். ஆனால் நிவாரண நிதி வழங்கி 22 நாட்களாகியும் கரூர் மாவட்ட நிர்வாகம் அதன் மூலம் எந்த நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாத தெரியவில்லை.

இதுகுறித்து அரவக்குறிச்சித் தொகுதி பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள், நிவாரண நிதி குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித தகவலையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்த போது, நிதியை பயன்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுமதி கொடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். அதற்கு முன்னாத அவர், 550 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட தொகுப்பை கரூர் கோடங்கிபட்டி கிராம மக்களுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: உதவிசெய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை!

ABOUT THE AUTHOR

...view details