தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இழப்பீடு வழங்கிய முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும்’ - போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூர்: சாயப்பட்டறை கழிவு மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய முதலமைச்சருக்கு, நன்றிக்கடன் பட்டவர்களாக அப்பகுதி விவசாயிகள் இருக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister
minister

By

Published : Aug 13, 2020, 1:54 AM IST

கரூர் மாவட்டத்தில் பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துப்பாளையம் நீர்த்தேக்க பிரதான கால்வாயில் சுமார் ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த வாய்க்கால், கரூர் மாவட்டத்தில் கார்விழி, தென்னிலை, அத்திப்பாளையம், குப்பம், புண்ணம், புஞ்சை தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய முக்கிய இடங்கள் வழியாக சுமார் 158 கிலோ மீட்டர் தூரம் சென்று பல்வேறு கிராமத்தில் பாசன வசதி பெறுகிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசியதாவது, "பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் 60 விழுக்காடு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் நலனுக்காக தண்ணீர் விரைவில் திறந்துவிடப்படும்.

நொய்யல் ஆற்றில் கலக்கப்படும் சாயப்பட்டறை கழிவு மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ரூ.230 கோடி இழப்பீடு தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே அப்பகுதி விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:பொறியியல் மாணவர் கண்டுபிடித்த தானியங்கி சானிடைசர் இயந்திரம்!

ABOUT THE AUTHOR

...view details