கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மயிலாடி எனும் ஊரைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (48). இவர் சேலத்தில் கைரேகை பிரிவில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜலிங்கம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (மே.18) சிகிச்சை பலனின்றி ராஜலிங்கம் உயிரிழந்தார்.
இவர், ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவச் சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர்.
காவல் துணை கண்காணிப்பாளரின் உயிரிழப்பு, காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று பாதித்து கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உயிரிழப்பு! - கரூர் செய்திகள்
கரூர்: கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
![கரோனா தொற்று பாதித்து கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உயிரிழப்பு! கரோனாவால் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11812433-76-11812433-1621388959377.jpg)
கரோனாவால் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உயிரிழப்பு!
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமருடன் முதலமைச்சர் ஆலோசனை