கரூர் மாவட்டம் தெற்கு அய்யம்பாளையத்தை சேர்ந்த ராமன்(61)-சின்னப்பொண்ணு(59) தம்பதிக்கும், பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமணன் (55)-அம்சவள்ளி(52) தம்பதிக்கும் இடையே நிலத்தகராறு இருந்துவந்தது. இதன் காரணமாக 2018ஆம் ஆண்டு ஆக.2ஆம் தேதி லட்சுமணன், அம்சவள்ளி இருவரையும் ராமன் கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
நிலத்தகராறில் கொலை... கரூர் தம்பதிக்கு ஆயுள் தண்டனை... - நிலத்தகராறில் கரூர் தம்பதிக்கு ஆயுள் தண்டனை
கரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் படுகாயமடைந்த இருவரும் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து லட்சுமணன் சிகிச்சை பலனின்றி அக். 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தவந்தது. இந்த நிலையில் நேற்று(மார்ச்.1) நீதிபதி, ராமன், சின்னப்பொண்ணு ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ராமருக்கு ரூ.2 ஆயிரமும், சின்னப்பொண்ணுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலருக்கு ஜாமீன்