கரூர்:கரூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த சரவணக்குமார் டிசம்பர் 13ஆம் தேதி இரவு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சியில் துணை ஆணையாளராக பணியாற்றி வந்த K.M.சுதா கரூர் மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து இன்று டிசம்பர் 14ஆம் தேதி காலை கரூர் மாநகராட்சி ஆணையாளராக சுதா பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பயன்படுத்தும் நான்கு சக்கர அரசு வாகனத்தில் கரூர் மாநகராட்சிக்கு வருகை தந்த சுதா, கரூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய ஆணையாளருக்கு மாநகராட்சி ஊழியர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஈடிவி பாரத் ஊடக செய்தியாளரிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சுதா, “கரூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், மாநகராட்சி ஆணையாளரின் செயல்பாடுகள் இருக்கும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை பொதுமக்கள் உடனுக்குடன் செலுத்தி மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.