தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கும் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கரூர்: மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Jul 1, 2020, 7:12 PM IST

வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும், அவரவர் விருப்பத்தின்பேரில் சொந்த செலவில் தனியார் தங்கும் விடுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவு தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களிடம் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் போதுமான வகையில் செய்யப்பட்டுள்ளதா என்றும், உணவு சரியான நேரத்தில் தரப்படுகின்றதா என்றும், மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 70 நபர்களும், குளித்தலை அரசு மருத்துவமனையில் 22 நபர்களும், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 1 நபர்ரும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் 4 நபர்களும், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 16 நபர்களும், தனியார் விடுதிகளில் 9 நபர்களும் என 122 நபர்களை தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

குளித்தலை அரசு மருத்துவமனையில் 91 படுக்கைகளும், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகளும், மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 66 படுக்கைகளும், மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகளும், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும், தயார் நிலையில் உள்ளது.

இந்நிகழ்வின் போது குளித்தலை சார் ஆட்சியர் அப்துல்ரக்மான் உள்ளிட்ட அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details