தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கரூர்: நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

By

Published : Jul 20, 2020, 3:58 PM IST

கரூர் நகராட்சிக்கு உள்பட்ட காந்தி கிராமம், கைராசி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சபாபதி (19). அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களுடன் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள தங்கவேல் என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

நீச்சல் தெரியாத சபாபதி நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார். அவரது நண்பர்கள் குளித்து விட்டு கிணற்றின் மேலே வந்து பார்த்தபோது சபாபதி காணாமல்போனது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையம், பசுபதிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சபாபதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி பயனளிக்காததால் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் உள்ள பயிற்சி பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் 40 அடி நீரில் மூழ்கி சபாபதி உடலை மீட்டனர். பின்னர் உடலானது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவன் நீச்சல் தெரியாமல் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

இதையும் படிங்க: நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலி!

ABOUT THE AUTHOR

...view details