தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் நகர காவல் நிலையம் பட்டபகலில் மூடப்பட்டதால் பரபரப்பு! - திருநங்கைகள்

கரூரில் திருநங்கைகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காவல் நிலையம் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் நகர காவல் நிலையம் பட்டபகலில் மூடப்பட்டதால் பரபரப்பு
கரூர் நகர காவல் நிலையம் பட்டபகலில் மூடப்பட்டதால் பரபரப்பு

By

Published : Nov 12, 2022, 3:18 PM IST

கரூர்: பகல் நேரங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும் ஆசாத் சாலையில் அமைந்துள்ள கரூர் நகர காவல் நிலையத்தில், விபத்துக்கள் மற்றும் புகார்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரூர் நகர காவல் நிலையம் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென மூடப்பட்டது.

கரூர் நகர் பகுதியில் உள்ள, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து 10 திருநங்கைகளை கரூர் நகர காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலையம் திடீரென மூடப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பேருந்து பயணிகளிடம் யாசகம் கேட்ட போது, பேருந்து ஓட்டுனர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நள்ளிரவில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, திருநங்கைகளுக்கு சுயமாக தொழில் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இருப்பினும் இரவு நேரங்களில் கரூர் கோவை சாலை, கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை பகுதிகளில் திருநங்கைகள் சிலர் யாசகம் கேட்டு இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பண பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தது.

இது சம்பந்தமாக தீபாவளிக்கு முன்தினம் இரவு இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரிடம் தங்கச் செயின், ரொக்கப் பண ஆகியவற்றை பறித்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை அடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், கரூர் நகர காவல்துறையினர் இன்று வீடியோவில் இருந்த திருநங்கைகளை அடையாளம் கண்டு, 10 பேரை விசாரணைக்காக கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தின் கேட் மூடப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர், ’பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே காவல் நிலைய வாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்”.

கரூர் நகர காவல் நிலையம் பட்டபகலில் மூடப்பட்டதால் பரபரப்பு

அப்பொழுது செய்தியாளர்கள் இதனை படம் பிடித்தபோது, காவல் நிலையத்துக்குள் இருந்த திருநங்கைகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். அதன் பின் கூடுதல் பெண் காவலர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சிறிது நேரம் கரூர் காவல் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சிறார் வழக்குகளுக்கு விதிமுறைகள் - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details