தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிழைக்கவே வழியில்லை: ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எதற்கு?

கரூர்: மணல் அள்ள உரிமை அளிக்காவிட்டால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக மாட்டுவண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

karur

By

Published : Nov 5, 2019, 7:18 AM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட மாயனூர் பகுதியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதியளிக்கக்கோரி அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அந்த சங்கத்தின் பிரதிநிதி தண்டபாணி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி தங்களது குடும்பச் சூழ்நிலையை போக்கி வந்ததாகவும் தற்போது இரண்டு ஆண்டுகளாக மணல் அள்ளுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டபோது நீதிமன்றத்தை அணுகி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனுமதி அளித்தால் மணல் அள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பிறகும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனுமதி தர மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

நீதிமன்றமே அனுமதி அளித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனுமதியளிக்காத காரணத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூறினர்.

மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை

இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த அவர்கள் மாட்டுவண்டி உரிமையாளர்கள் அப்படி எடுக்காவிட்டால் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை தாங்கள் புறக்கணிப்போம் என்றும், பிழைப்பிற்கே வழி இல்லாதபோது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ரேஷன் கார்டு போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டும்' - பி.ஆர். பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details