கரூர்:கரூர் அடுத்த வாங்கல் நெரூர் பகுதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர் ஆகியோரை தவறாக சித்தரித்து புகைப்படம் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து கரூர் மாவட்ட திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி தீபக் சூரியன் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இன்று (ஏப்.12) காலை பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ்.ஏ.விக்னேஷ் என்பவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.