தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி அணிந்த கரூர் கோட்.. விலை எவ்வளவு தெரியுமா? - pm modi coat price

பிரதமர் நரேந்திர மோடி அணிந்த மறுசுழற்சி செய்யப்பட்ட கோட்(coat) அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அந்த கோட் கரூர் மாவட்டத்தில் வடிவமைத்தது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை களநிலவரத்தை ஈடிவி பாரத் செய்திகள் வழியாக பார்க்கலாம்..

பிரதமரின் கோட்டுக்கு சொந்தக்கராரர் இவர்கள்தான்.. கரூரில் இருந்து டெல்லியை கலக்கும் நிறுவனம்!
பிரதமரின் கோட்டுக்கு சொந்தக்கராரர் இவர்கள்தான்.. கரூரில் இருந்து டெல்லியை கலக்கும் நிறுவனம்!

By

Published : Feb 14, 2023, 9:23 AM IST

ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சங்கர் பேட்டி

கரூர்: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதல்கட்டமாகத் தனது மூன்று லட்சம் ஊழியர்களுக்கு ஆடை வடிவமைத்து வழங்குவதற்குக் கரூரில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்குப் பரிசாக நீல நிற ஆடை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான நன்றியுரை கூறும் நிகழ்ச்சியில், நீல நிற ஆடையைப் பிரதமர் மோடி அணிந்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி அணிந்து வந்த கோட் உள்பட பல்வேறு ஆடைகளை பிளாஸ்டிக் மறுசுழற்சி அடிப்படையில் தயாரித்து வருவது குறித்து கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கே.பி குளத்தில் இயங்கி வரும் நிறுவனமான ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சங்கர், ஈடிவி பாரத்துக்கு பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய சங்கர், “எக்கோலின்குரோதின் தர அடையாளத்துடன் இயங்கி வரும் எங்கள் நிறுவனத்தில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு, மறுசுழற்சி தொழில்நுட்பத்தின் மூலம் நூல்களாக மாற்றி குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைத்து தரப்பினரும் அணியக்கூடிய டீ சர்ட், கோட் போன்ற ஆடைகளைக் குறைந்த செலவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறோம்.

இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தக ரீதியாகவும், நாட்டின் சூழ்நிலைக்கு உகந்ததாக உள்ள ஆடைகளை விற்பனைக்குக் கொண்டு வரவும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கவும் அணுகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், முதல் கட்டமாகத் தனது 3 லட்சம் ஊழியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள 'பிளாஸ்டிக் இல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி 'எனும் நிகழ்ச்சியில் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைகள் வழங்க உள்ளது.

எனவே 3 லட்சம் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஆடையைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நீல நிற கோட் ஆடையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பிரதமர் மோடிக்கு வழங்கியது. இதில் எதிர்பாராத விதமாக அடுத்த 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் பிரதமர், நீல நிற கோட் ஆடையை அணிந்து வந்தார்.

சந்தையில் 10,000 ரூபாய் முதல் கிடைக்கக்கூடிய ஆடையை வெறும் 2,000 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் தயாரித்து வழங்குவதால், ஆர்டர்கள் அதிகளவில் வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விடுவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி, அதன் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்து, அனைவருக்கும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்ச்சி உள்ளது எனச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, உலகம் முழுவதும் இந்தியப் பிரதமர் ஏற்படுத்தினார் என்றே கருதுகிறோம்.

கச்சா எண்ணெய் மூலம் எடுக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் மூலம் பாலிஸ்ட் எனப்படும் வெர்ஜன் பாலிஸ்டர்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலித்தீன் கெமிக்கலில் முழுக்க எரிசக்தி சிக்கனம், 90 சதவீத தண்ணீர் சிக்கனம் மூலம் ஆடை வடிவமைப்பு செய்யப்படுகிறது. வட இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து பல்வேறு தயாரிப்புகள் மேற்கொண்டாலும், ஆடை வடிவமைப்புக்குத் தேவையான நூலாக மாற்றும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் உள்ள கரூரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

டீ சர்ட் மற்றும் கோட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நூல்களால் ரசாயன எதிர்வினைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. பிரபல ஆடை நிறுவனங்கள் விற்கும் விலையை காட்டிலும், வெறும் 2,000 ரூபாய்க்கு கோட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுவதற்கு குறைந்த அளவே செலவு என்பதால் மலிவு விலையில் ஆடை சாத்தியமானது” என்றார்.

இதையும் படிங்க:ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details